மழவராயனூர் கிராமத்தில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :4233 days ago
விழுப்புரம்: மழவராயனூர் கிராமத்தில் உள்ள கொஞ்சுமலை மாரியம்மன் கோவிலில் நாளை (4ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.விழுப்புரம் அடுத்த மழவராயனூரில் உள்ள செல்வ விநாயகர், கற்பக விநாயகர் மற்றும் கொஞ்சு மலை மாரியம்மன் கோவில்களுக்கான மகா கும்பாபிஷேகம், நாளை (4ம் தேதி) காலை நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (3ம் தேதி) காலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி நடக்கிறது. நாளை காலை, இரண்டாவது கால யாகபூஜைகள், யாத்திரதானம், யாகசாலைக்கு கடங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து காலை 8 மணி முதல் 8:20 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.