உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சனையில் தேவாரம் , திருவாசகம் :சைவ திருமுறை மாநாட்டில் தீர்மானம்!

அர்ச்சனையில் தேவாரம் , திருவாசகம் :சைவ திருமுறை மாநாட்டில் தீர்மானம்!

திருவான்மியூர்:  அனைத்துலக சைவ திருமுறை கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது சைவ திருமுறை மாநாடு சென்னை திருவான்மியூரில் கடந்த இருநாட்களாக நடந்து வருகிறது. நிறைவு நாளான நேற்று மாலை பன்னிரு திருமுறை, யானை மீது வைக்கப்பட்டு ஊர்வலம் நடந்தது. இதில் திருஞானசம்பந்தரின் திருவெழு கூற்றிருக்கை பதிகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட  தேர் வீதி உலா நடந்தது. தொடர்ந்து மாநாட்டில், தேவாரம், திருவாசம், திருமந்திரம் ஆகிய சைவ நூல்களை தமிழ் வேதமாக பிரகடனப்படுத்திடவும், அவற்றை சிவன் கோயில்களில் அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !