உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் சிறப்பு ஹோமம்!

சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் சிறப்பு ஹோமம்!

புதுச்சேரி: உலக நன்மை வேண்டி, எல்லைப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோயிலில்  சிறப்பு ஹோம் நடந்தது. ஆதிசங்கரர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு புதுச்சேரி குருநாதய்யர் புரோகிதர் மற்றும் பிராமணர் நலச்சங்கம், ரூத்ரபாத சேவா அறக்கட்டளை இணைந்து எல்லப்பிள்ளைச் சாவடியில்   உள்ள சாரதாம்பாள் கோயிலில்  நேற்று சகல தேவதா மூலமந்திர ஹோமமும் அதை தொடர்ந்து வருண ஜபமும் நடந்தது.இதில் பல்லடம் சம்பாசிவரிஷிஸ்வரர் சுவாமிகள் தலைமை தாங்கி, பூஜைகளை நடத்தி வைத்தார். சிறப்புஹோமத்தில் சங்க உறுப்பினர்கள் , பக்தர்கள் கலந்து கொண்டனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !