காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம்!
ADDED :4176 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், ஆண்டு பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன், துவங்குகிறது. காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், இன்று காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று முதல் பத்து நாட்கள் காலை மற்றும் மாலையில் பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளன.மேலும், வரும் 12ம் தேதி மகா ரதம் உற்சவமும் நடக்க உள்ளது. பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது.