காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4270 days ago
தொண்டி : தொண்டி அருகே சித்தாமங்கலம் காளியம்மன் கோயிலில், நேற்று காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, கும்பத்தில் புனித நீர் ஊற்றினர். சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. திருவாடானை அருகே சுப்பிரமணியபுரம் ஆளவந்தான் கோயிலில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.