உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவில் தேர் வெள்ளோட்டம்!

பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவில் தேர் வெள்ளோட்டம்!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்திலுள்ள பனங்காட்டீஸ்வரர் சமேத சத்தியாம்பிகை கோவில் கி.பி.,1052ம் ஆண்டு இரண்டாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இக் கோவிலுக்கு சொந்த மான தேர் பழுதடைந்ததால், கடந்த 4 ஆண்டுகளாக தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கோவிலை நிர்வகித்து வரும் இந்து அறநிலைத்துறை நிதியிலிருந்து தமிழக அரசு 13 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது. இதனையடுத்து கோவில் தேர் புணரமைக்கப்பட்டு, நேற்று வெள்ளோட்டம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை கணேசன் குருக்கள், பாபு குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து மாடவீதி வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்து அறநிலைய துறை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், உதவி செயற்பொறியாளர் ரவி, தக்கார் கவியரசு , வி.ஏ.ஓ., வாசுதேவன், ஊராட்சி மன்ற தø லவர் மீனாட்சி ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !