உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 63 நாயன்மார்கள் உற்சவம் கோலாகலம்

63 நாயன்மார்கள் உற்சவம் கோலாகலம்

செங்கல்பட்டு  : செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா வையொட்டி,   63 நாயன்மார்கள் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விநாயகர், முருகன், சண்டீகேஸ்வரர், அம்பாள், சிவன் ஆகிய சாமிகளுடன் 25 பல்லக்கில் அறுபத்து மூவரும், 2, 3, 4 என உற்சவர்கள் பிரிக்கப்பட்டு புறப்பாடு நடைபெற்றது. திருக்கழுகுன்றம் முழுவதும் 63 நாயன்மார்கள் வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர். ஏராளமான பக்தர்கள் 63 நாயன்மார்களுடன் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !