சீதா கல்யாண மஹோத்சவம்
ADDED :4173 days ago
கிருஷ்ணகிரி : சீதா ராம பக்தர்கள் சார்பில் கிருஷ்ணகிரியில் சீதா கல்யாண மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.சீதா கல்யாண மஹோத்சவத்தை முன்னிட்டு, சனிக்கிழமை
படப்பிரதிஷ்டை, உஞ்சவிருத்தி, அஷ்டபதி பஜனை, திருவிளக்கு பூஜை, திவ்யநாம பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை உஞ்சவிருத்தி, ஸ்ரீ சீதா ராம கல்யாண மஹோத்சவம், பவளிம்பு வசந்த கேளிக்கை, ஆஞ்சநேய உத்சவம் ஆகியவை நடைபெற்றன.