சமயபுரம் கோயிலில் இன்று வசந்த உத்சவம்
ADDED :4284 days ago
திருச்சி : திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் வசந்த உத்சவம் இன்று (மே 6) தொடங்குகிறது.இக்கோயிலில் நடைபெறும் ஐம்பெரும் திருவிழாக்களில் பஞ்சப்பிரகாரத் திருவிழாவும் ஒன்று. அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக 15 நாள்களுக்கு வசந்த உத்சவம் எனப்படும் பஞ்சப்பிரகாரத் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் உத்சவ அம்மன் வெள்ளிக் கேடயத்தில் புறப்பாடாகி இரவு வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 10ம் திருநாளான மே 15ம் தேதி பஞ்சப்பிரகார உத்சவம் நடைபெறும். , 20ம் தேதி வெள்ளி வரை நடக்கும் இந்த விழாவின் இறுதி நாளில் .பஞ்சப்பிரகாரத் திருவிழாவில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பர்