உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மச்சார் அம்மன் கோயில் தேர்த் திருவிழா

அம்மச்சார் அம்மன் கோயில் தேர்த் திருவிழா

செஞ்சி ; செஞ்சி வட்டம்,  கீழ்மாம்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவிநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், அம்மச்சார் அம்மன் கோயிலில் 14ம் ஆண்டு மஹோத்ஸவ விழா மற்றும் 5ம் ஆண்டு ரதோத்ஸ்வ விழா கடந்த 3ம் தேதி  முதல்  நடைபெற்று வருகிறது.  நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரினில் அம்மச்சார் அம்மன் பலவித மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  பின்னர் தேரோட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !