உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூர் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான
தூண்டுகை விநாயகர் கோயிலில்  நேற்று வருஷாபிஷேகம் நடைபெற்றது.விழாவை
முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 7 மணிக்கு கும்ப பூஜை, கணபதி
ஹோமம், தொடர்ந்து காலை 10 மணிக்கு பூர்ணாகுதி, 10.15 மணிக்கு பூஜைசெய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்துக்கு கொண்டு வரப்பட்டு, விமான அபிஷேகம் நடைபெற்றது.  பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !