பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
ADDED :4171 days ago
கோவில்பட்டி : கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி மற்றும் இரவில் கோயில் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெறும்.முக்கிய நிகழ்ச்சியாக 16ம் தேதி கோயில் முன்பு மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெறும்