வெண்ணைலிங்கேஸ்வரர் கோவிலில் பூச நட்சத்திர சிறப்பு வழிபாடு
ADDED :4171 days ago
ஆக்கூர்: மயிலாடுதுறை– பூம்புகார் ரோட்டில் மேலப்பாதி கிராமத்தில் மகாதிரிபுரசுந்தரி ெண்ணைலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாகார்ஜுனசேத்திரம் என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலில் பூச நட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது.முன்னதாக 18 கலச பூஜை, கணபதி யாகம், நவக்கிரக யாகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வெண்ணைலிங்கேஸ்வரர் சாமிக்கு கலசாபிசேகம் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து நாகாபரண அலங்காரம் செய்து ஆராதனை நடந்தது. சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.