உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், நேற்று பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் மாலை, அங்குரார்ப்பணம் மற்றும் சேனை முதல்வர் புறப்பாடுடன் துவங்கியது. இதையொட்டி, புற்றுமண் கொண்டு நடத்திய யாகம், ஆவாஹணத்திற்குபின், இரவு 7:00 மணிக்கு, சுவாமி வீதியுலா நடந்தது.அதைத்தொடர்ந்து, நேற்று காலை, 5:45 மணிக்கு, கொடியேற்றி, நவசந்தி ஆவாஹணத்திற்குபின், சுவாமி வீதியுலா, கேடயசேவை, மற்றும் இரவு மங்களகிரி சேவைகள் நடந்தன. மேலும், தினமும் காலை, மாலையில் வாகன சேவைகள் நடக்கின்றன. 10ம் தேதி இரவு கருடசேவையும், 12ம் தேதி காலை திருத்தேர் வீதியுலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !