அகத்திய மகரிஷி சிலை பிரதிஷ்டை!
சென்னை: வானகரம், மேட்டுக்குப்பத்தில் அமைந்து உள்ள, பிரசித்தி பெற்ற மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் திருக்கோவிலில், அகத்திய மகரிஷி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிவபுத்திரராக கருதப்படும் அகத்தியர், சித்தர்களுக்கெல்லாம் முதன்மையானவர். முருகப் பெருமானிடம், நேரிடையாக பிரணவ உபதேசம் பெற்றவர். தமிழுக்கு முதன்முறையாக இலக்கணம் வகுத்த அவர், சித்த மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர். சிவபெருமான் - பார்வதி அன்னையின் திருமணத்தின்போது, உயர்ந்த தென்பகுதியை சமன் செய்தவர். அட்டமா சித்திகளை பெற்று, இன்றளவும் சூட்சும ரூபியாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு, சென்னை, வாகனரம், மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ள, மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் திருக்கோவிலில் முதன்முதலாக, மூன்றரை அடி உயர சிலையும், அவரின் தர்மபத்னி ஸ்ரீ லோபா முத்திரை சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.