பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவிலில் கொடியேற்றம்!
ADDED :4171 days ago
பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே இடிகரை பள்ளி கொண்ட ரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்று விழா நேற்று நடந்தது. சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த செவ்வாய்கிழமை கருட பிரதிஷ்டையுடன் துவங்கியது.நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. பள்ளிகொண்ட ரங்கநாதசுவாமி இன்று காலை சிம்மவாகனத்திலும், நாளை அனுமந்த வாகனத்திலும், சனிக்கிழமை கருடவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை மோகினி அலங்காரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 13ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து புதன்கிழமை பரிவேட்டையும், திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், வியாழக்கிழமை தெப்போற்சவமும், வெள்ளிக்கிழமை டோலோற்சவமும் நடக்கிறது.