தீவனூர் விநாயகர் கோவில் நாளை 1008 பால் குட ஊர்வலம்!
ADDED :4220 days ago
திண்டிவனம்: தீவனூர் விநாயகர் கோவிலில் நாளை (9ம் தேதி) 1008 பால்குட உற்சவம் நடக்கிறது.திண்டிவனம் அடுத்த தீவனூர் பிரசித்திபெற்ற சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 3 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 7 ம் நாள் உற்சவமாக நாளை 1008 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடக்கிறது. 10 ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 11 ம் தேதி தேரோட்டம், 12 ம் தேதி தீர்த்தவாரி, 13ம் தேதி முத் துப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.