குளித்தலையில் பூச்சொரிதல் விழா
குளித்தலை: குளித்தலை மகாமாரியம்மன் சித்திரை திருவிழாவையொ ட்டிபூச்சொரிதல் விழா நடந்தது. பிரச்சித்தி பெற்ற குளித்தலை மகா மாரியம்மன் சித்திரை திருவிழா கடந்த 4ஆம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி குளித்தலை பகுதியில் 26 இடங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மாரியம்மன் உருவம் பொறிக்கப்பட்டு பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நள்ளிரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. வரும் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவ மாரியயம்மன் கடம்பர் கோவிலிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். 18ம் தேதி இரவு அரண்மனை மாவிளக்கு நடக்கிறது. வரும் 20 ம் தேதி காலை 10.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல், அன்று மதியம் 2.30 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23 ம் தேதி மாலை 7.00 மணிக்கு, மஞ்சள் நீராட்டுவிழாவும், காவிரியாற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சியும் நடக் கிறது.