கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம்
ADDED :4170 days ago
புதுச்சேரி: வில்லியனூர் பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயில் திருவிழ தேரோட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் சாகை வார்த்தல், ஊரணி பொங்கல் படைத்தல், கூத்தாண்டவர் கோயிலில் இரவு கிராம மக்கள் கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. வரும் 13-ம் தேதி இரவு கூத்தாண்டவருக்கு திருக்கல்யாணமும், பக்தர்கள் தாலி கட்டும் நிகழ்ச்சியும் மாலை அரவான் பலியிடுதலும், தாலி அறுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.