நாளை மீனாட்சி திருக்கல்யாணம்: பரமக்குடியில் மே 10ல் தேரோட்டம்!
பரமக்குடி : பரமக்குடி மீனாட்சி அம்மன், ஈஸ்வரன் கோயில்களில் நாளை சித்திரை பிரம்மோத்ஸவ திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சித்திரைத் திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி - அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர். இன்று திருக்கல்யாண மண்டபத்தில், சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு சுந்தரேஸ்வர சுவாமி, மாப்பிள்ளை அழைப்புடன் கோயிலுக்குள் வருகிறார். தொடர்ந்து மீனாட்சி திருக்கல்யாணம், மாலை 6 மணிக்கு நடக்கிறது.
இதே போல் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், இன்று காலை விசாலாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். நாளை காலை 9.30 மணிக்கு சந்திரசேகரசுவாமி மாப்பிள்ளை அழைப்புடன், காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் புஷ்ப பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் செய்கின்றனர். தொடர்ந்து மே 10ல் இரண்டு கோயில்களிலும் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.