உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவிலில் சித்திரை விழா!

தஞ்சை பெரியகோவிலில் சித்திரை விழா!

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஓலை சப்பரத்தில் பிரகதீஸ்வரர், பிரஹன்நாயகி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தஞ்சை பெரியகோவிலில் வருடம்தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. நடப்பாண்டும் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் பிரகதீஸ்வரர், பிரஹன் நாயகி அம்மன் வீதியுலா காட்சி நடந்து வருகிறது. 13வது தினமான, கடந்த 7ம் தேதி இரவில் ஓலைச்சப்பரத்தில் பிரகதீஸ்வரர், பிரகன்நாயகி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெரியதாக வடிவமைக்கப்பட்ட சப்பர ஊர்வலத்தில், முன்புறத்தில் விநாயகரும், அவரை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முருகன், தொடர்ந்து, ராஜராஜன், நந்தியம்பெருமான் சிலை வடிவங்களை வைத்து, எடுத்து செல்றனர். சப்பரத்துக்கு பின்புறத்தில், மற்றொரு சிறிய சப்பரத்தில் பிரஹன்நாயகி அம்மன் மட்டும் தனியாக உலா வந்தார். தஞ்சை நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஓலைச்சப்பர ஊர்வலம் நடந்தது. இதில், பக்தர்கள் திரளா பங்கேற்றனர். ஏற்பாட்டை தஞ்சை பெரியகோவில் நிர்வாக அலுவலர் அரவிந்தன், கண்காணிப்பாளர் ரங்கராஜன் தலைமையில் அலுவலர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !