உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்காயி கோவில் கும்பாபிஷேக திருவிழா மற்றும் திருக்கல்யாண வைபவம்!

தங்காயி கோவில் கும்பாபிஷேக திருவிழா மற்றும் திருக்கல்யாண வைபவம்!

நாமக்கல்: நாமக்கல், கரையான்புதூர் தங்ககாயி கோவில் கும்பாபிஷேகம், சேந்தமங்கலம் வெங்கட்ரமணி ஸ்வாமி திருக்கல்யாணம், ராமநவமி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடக்கிறது. சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் வெங்கட்ரமண ஸ்வாமி, சத்தியபாமா, ருக்மணி தேவியார் ஸ்வாமிக்கு, 18ம் ஆண்டு திருக்கல்யாணம் மற்றும், 250ம் மாத சித்ரா பவுர்ணமி திதி சிறப்பு பூஜை, வரும், 14ம் தேதி, காலை, 9 மணிக்கு நவகிரஹ ஹோமத்துடன் துவங்குகிறது. மாலை, 5.30 மணி முதல், 7.30 மணி வரை, வெங்கட்ரமண ஸ்வாமிக்கும், சத்தியபாமா மற்றும் ருக்மணி தேவியாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் சித்ரா பவுர்ணமி பூஜைக்கு, அபிஷேக பொருட்கள் வழங்க விரும்பும் பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ளலாம்.

* நாமக்கல் அடுத்த கரையான்புதூர் தங்காயி அம்மன், விநாயகர், மாரியம்மன் ஸ்வாமி கோவிலுக்கு, வரும், 11ம் தேதி, காலை, 6.30 மணி முதல், 7.30 மணி வரை, மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இன்று (9ம் தேதி), காலை, 9 மணிக்கு, காவிரி தீர்த்தம் அழைத்து வருதல், நாளை (10ம் தேதி), காலை, 7.30 மணிக்கு, கோபுர கலசங்கள் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 5 மணிக்கு, விநாயகர் வழிபாடு, நவகிரக பூஜை, தீபாராதணை, இரவு, 10 மணிக்கு, சிலைக்கு எந்திரம் மற்றும் நவதானியம் வைத்து, மருந்து சாத்துதல் நடக்கிறது. வரும், 11ம் தேதி, அதிகாலை, 5 மணிக்கு, சிலைக்கு காப்பு கட்டுதல், மண்டப ஆராதனை, கும்பம் புறப்படுதல் ஆகியன நடக்கிறது. காலை, 6.45 மணிக்கு, கோவில் கோபுரம் மற்றும் ஸ்வாமி சிலைக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 9 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடக்கிறது. 12ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

* நாமக்கல், கோட்டை ஸ்ரீராமகிருஷ்ண மாருத்யாதி பஜனகான சபா சார்பில், நேற்று (8ம் தேதி) முதல், வரும், 17ம் தேதி வரை, 102வது ராமநவமி விழா, கோட்டை கார்னேஷன் சத்திரத்தில் நடக்கிறது. அதையடுத்து, தினமும், கட்டளைதாரர்களால், தீபாராதனை, அர்ச்சனை, திவ்ய நாம பஜனை, சங்கீர்த்தனம் உள்ளிட்ட வைபவங்கள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !