புனித சூசையப்பர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது
பெரம்பலூர்: பாளையம் புனித சூசையப்பர் கோயில் திருத்தேரோட்டம் இன்று நடக்கிறது. பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் புனித சூசையப்பர் கோயில் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. இந்தக்கோயிலின் ஆண்டுப்பெருவிழா கடந்த 2ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மே 3ம் தேதி மற்றும் 4ம் தேதி சேலம் சமூகசேவை மைய இயக்குநர் அருட்திரு செல்வம் பிரான்சீஸ் தலைமையிலும், 5ம் தேதி வாளைப்பாடி பங்குகுரு குருசடிசகாயராஜ் தலைமையிலும், 6ம் தேதி துறையூர் பங்குகுரு மைக்கேல் தலைமையிலும், 7ம் தேதி திருவாளந்துறை பங்குகுரு ஆரோக்கியசாமி தலைமையிலும், 8ம் தேதி பாடாலூர் பங்குகுரு ராஜமாணிக்கம் தலைமையிலும் மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. 9ம் தேதி கும்பகோணம் மறைமாவட்ட பொருளாளர் பிலிப்சந்தியாகு தலைமையில் திருப்பலியும் இதைத்தொடர்ந்து இரவு ஆடம்பர தேர் பவனியும் நடக்கிறது. 10ம் தேதி கும்பகோணம் மறைமாவட்ட முதன்மைகுரு பாக்கியசாமி தலைமையில் திருப்பலியும், புறத்தாக்குடி விடுதி காப்பாளர் தாமஸ்சைமன் மறையுரையும் நடக்கிறது. இன்று இரவு ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 11ம் தேதி காலை பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு அடைக்கலசாமி தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலியும், அதனைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் தேர்பவனியுடன், கொடியிறக்கமும், நர்கருணை ஆசீரும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குகுரு சேவியர் தலைமையில் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.