உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமியையொட்டி 3 நாள் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சித்ரா பவுர்ணமியையொட்டி 3 நாள் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம், 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை, மூன்று நாள், மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகின்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(சேலம் கோட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஆத்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், சேலத்தில் இருந்து பழனிக்கும், சேலத்தில் இருந்து மதுரை, மேல்மருத்துவத்தூர், சேலம், மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படாமல், சிறப்பு பஸ்கள் மூலம் வழிபாட்டு தலங்களுக்கு சென்று பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !