லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி மகோற்சவம்!
ADDED :4168 days ago
புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி மகோற்சவம் இன்று(13ம் தேதி) நடக்கிறது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில், லட் சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நரசிம்ம ஜெயந்தி மகோற்சவம் இன்று(13ம் தேதி) நடக்கிறது. விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை இன்று காலை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, நுாதன மங்களகிரி வாகனத்தில், பத்து நரசிம்ம உற்சவர் களும், ஆசார்ய பிரதிமைகளுடன் திருவீதி புறப்பாடு மாலையில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, லட்சுமி ஹயக்ரீவர் கோவில் சிறப்பு அதிகாரி, பக்த ஜன சபையினர் மற்றும் லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.