ஜெகநாதர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா!
ADDED :4169 days ago
கோவை : ஜெகநாதர் கோவிலில், இன்று ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த நாளான இன்று, நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஜெகநாதர், நரசிம்ம அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். காலை 9:30 மணியளவில், நரசிம்ம ஹோமம், 108 நரசிம்ம மஹாமந்திர உச்சாடனத்துக்கு இடையே நடக்கிறது. மாலை நிகழ்ச்சிகள், திருவீதி உலாவுடன் 5:30 மணியளவில் துவங்குகிறது. ஆரத்தி, ஸ்ரீ நரசிம்மரின் சிறப்புகள் குறித்து, வினோத சுவாமி அவர்களின் சிறப்பு பிரசங்கம் மற்றும் பிரசாத வினியோகம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பக்தர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என, அழைப்பு விடப்பட்டுள்ளது.