உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் பூச்செரிதல் ஊர்வலம்: போலீஸ் அறிவுரை

கரூர் மாரியம்மன் பூச்செரிதல் ஊர்வலம்: போலீஸ் அறிவுரை

கரூர்: ""கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, பூச்செரிதல் ஊர்வலத்தை விரைவாக துவங்கி முடிக்க வேண்டும் என, கரூர் டவுன் டி.எஸ்.பி., இளங்கோ தெரி வித்தார். தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்செரிதல் விழா வரும், 16ம் தேதி நடக்கிறது. பூச்செரிதல் ஊர்வலத்தின் போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில், பூத்தட்டு ஊர்வலத்தில் வருகிறவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்யக் கூடாது. ஊர்வலம் அதிகாலை, 12 மணிக்குள் கோவிலை அடைய வேண்டும். அப்போது தான், கோவிலில் பூத்தட்டு ஊர்வலத்தில் வருபவர்கள், அனைவரும் ஸ்வாமி தரிசனம் செய்ய முடியும். இதற்காக, ஊர்வலத்தை முதல் நாள் இரவு, 9 மணிக்கு துவக்க வேண்டும். ஊர்வலத்தில் கொண்டு வரப்படும் வாகனங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும், என்று டவுன் டி.எஸ்.பி., இளங்கோ அறிவுறுத்தினார். கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செட்ரிக்மெனுவெல், அனைத்து பூச்செரி தல் விழா கமிட்டி தலைவர் மதன், துணைத்தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் பாலு, பொருளாளர் ராகவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !