உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாத ஸ்வாமி கோவில் திருகல்யாண உற்சவம்

ரங்கநாத ஸ்வாமி கோவில் திருகல்யாண உற்சவம்

கரூர், அபயபிரதான ரங்கநாத ஸ்வாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பிரசித்தி பெற்ற கரூர் அபயபிரதான ஸ்வாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாள்தோறும், பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. கடந்த, 11 ம் தேதி மாலை, 4.30 மணிக்கு ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், நாளை அமராவதி ஆற்றில் தீர்த்த வாரியும், வரும், 16 ம்தேதி ஊஞ்சல் உற்வசம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !