உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜபுரம் விநாயகர் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்

தியாகராஜபுரம் விநாயகர் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தில் மழை வேண்டி வருண ஜெபம் நடந்தது. சங்கராபுரம் பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து வறண்டு போனது. இதனால் மக்கள் குடிதண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது. தியாகராஜபுரம் விநாயகர் கோவிலில் சுவாமியை சுற்றி சிமென்ட் கட்டை கட்டி வினாயகர் கழுத்தளவு தண்ணீர் நிரப்பி வருண ஜெபம் நடந்தது. விசுவநாத கணபாடிகள், பாலசுப்ரமணிய சாஸ்திரி தலைமையில் வருண ஜெயம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !