உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடிகரை பெருமாள் கோவில் தேரோட்டம்!

இடிகரை பெருமாள் கோவில் தேரோட்டம்!

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இடிகரையில் உள்ள பள்ளி கொண்ட ரங்கநாதசுவாமி கோவில் பிரம்மோற்சவம் தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி திருமுனை நகர சோதனையுடன் துவங்கியது. நேற்று காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து, மீண்டும் கோவில் வளாகத்தை அடைந்தது. இன்று புதன்கிழமை மாலை குதிரை வாகனம், 8.00 மணிக்கு பாரிவேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை தெப்போற்சவமும், சேஷ வாகனம், சதுர்வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. வெள்ளிக்கிழமை டோலோற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், திவ்ய பிரபந்த சேவா காலங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !