கள்ளக்குறிச்சியில் பெருமாள் தாயார் திருக்கல்யாணம்!
ADDED :4177 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தில் பெருமாள் தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 7 நாட்களாக நடந்து வருகிறது. பெருமாள் தாயார் திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது. விஸ்வக்சேனர் வழிபாடு, புன்னியாவதனம், முளைப் பாலிகை இடுதல், காப்புக்கட்டுதல், மாலை மாற்றுதல் நடந்தது. யாகம் முடிந்து பெருமாள், தாயார் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோவிலின் தேர்த்திருவிழா இன்று நடக்கிறது.