உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா!

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா!

புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா நேற்று நடந்தது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில்,  லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நரசிம்ம ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவிலில் எழுந்தருளியுள்ள, தச நரசிம்மர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு புதிதாக மங்களகிரி வாகனம், 3 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ளது. புதிய வாகனத்தின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு, ஹோமம், பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து, மங்களகிரி வாகனத்தில், மாலையில் சுவாமி வீதி புறப்பாடு நடந்தது. பத்து நரசிம்மர் விக்ரஹங்களும், நான்கு ஆசார்ய பிரதிமைகளுடன் வீதியுலா வந்து அருள் பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி, லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் பக்த ஜன சபையினர், லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !