உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னி அம்மன் கோவில் தேர் திருவிழா

பொன்னி அம்மன் கோவில் தேர் திருவிழா

சித்தாமூர் : நுகும்பல் கிராமத்தில் உள்ள பொன்னி அம்மன் கோவில், சித்திரை மாத தேர் திருவிழா, இன்று நடக்கிறது. சித்தாமூர் அடுத்த, நுகும்பல் கிராமத்தில், கங்கை அம்மன் மற்றும் பொன்னி அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன.இந்த கோவில்களில், சித்திரை மாத தேர்த் திருவிழா, கடந்த, 6ம் தேதி, துவங்கியது. விழாவையொட்டி, தினமும் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கடந்த, 10ம் தேதி காலை, 9:00 மணிக்கு, கங்கை அம்மன், கரக வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பலித்தார்.நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, கங்கை அம்மனுக்கு கூழ்வார்த்தல் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று காலை, 10:00 மணிக்கு, பொன்னி அம்மன் அலங்கார தேரில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !