சோழவந்தானில் ஆற்றில் இறங்கிய அழகர்!
ADDED :4168 days ago
சோழவந்தான் : சோழவந்தானில், ஜெனகைநாராயணப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய திருவிழாவாக நேற்று, வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பச்சை பட்டாடை உடுத்தி, வெண்குதிரையில் இறங்கினார். முன்னதாக, தீயணைப்புத்துறையினர் தண்ணீர் தெளித்து அழகரை குளிர வைத்து வரவேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜேந்திரகுமார், ஊழியர்கள் பூபதி, தர்மராஜ் செய்திருந்தனர்.