காரிமங்கலம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த சங்கணம்பட்டி குள்ளன்கொட்டாயில் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர், விநாயகர் கோவில் நீண்ட காலத்துக்குபின், பொதுமக்களால் சீரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழாவும், சித்ரா பவுர்ணமி விழாவும் நடந்தது. விழாவை முன்னிட்டு, கடந்த, 13ம் தேதி விநாயகர் பூஜை, கணபதி ஹோமமும் நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு, மஹா கும்பாபிஷேகமும், அழகு வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும், 1,008 புஷ்ப அர்ச்சனை நடந்தது. மதியம், 12 மணிக்கு அனுமன் வரலாறு குறித்தும், அவரது சிறப்புகள் குறித்தும் குப்புசாமி ஸ்வாமிகளின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. ஒரு மணியில் இருந்து மாலை வரை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8 மணிக்கு, வாணவேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் குள்ளன் கொட்டாய், நடேசன் கொட்டாய், சங்கணம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.