கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை பூச்சொரிதல் கோலாகலம்!
கரூர்: தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை, வைகாசி திருவிழா நடப்பது வழக்கம். இதில், கரூர் மாவட்டம் மட்டுமன்றி, திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களும் ஆண்டுதோறும் பங்குபெறுகின்றனர். நடப்பாண்டு, கடந்த 11ம் தேதி கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதல் விழாவுடன் துவங்கியது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். திருவிழாவையொட் டி நாளை மாலை, கரூரில் பூச்சொரிதல் விழா நடக்கிறது. அப்போது, கரூர் நகரின் பல பகுதியில் இருந்து, பக்தர்கள் பூக்களை தட்டு மற்றும் கூடைகளில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்வது வழக்கம். பூச்சொரிதல் திரு விழாவை யொட்டி கரூர் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 18ம் தேதி காப்பு கட்டுதல், 26ம் தேதி திருத்தேர் ஊர்வலமும், 26 ம் தேதி அக்னி சட்டி, அலகு, காவடி ஊர்வலம் 28ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் வெகுசிறப்பாக நடக்க உள்ளது. அன்றிரவு அமராவதி ஆற்றில் நடக்கும் வாண வேடிக்கை திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.