உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுதந்திராபுரத்தில் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா!

சுதந்திராபுரத்தில் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா!

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சுதந்திராபுரத்தில் உள்ள உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா மற்றும் குண்டம் விழா ஏப்., 29ல் பூச்சாட்டுடன் துவங்கியது. கடந்த 6ல் திருக்கம்பம் நடப்பட்டு, ஒவ்வொரு நாளும் அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 13ம் தேதி இரவு பவானி ஆற்றிலிருந்து அம்மனுக்கு சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. நேற்று காலை 6.00 மணிக்கு குண்டம் விழா நடந்தது. கோவில் தலைமை பூசாரி அங்கமுத்து குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து, முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள் ராஜேந்திரன், கதிரேஷன் ஆகியோர் இறங்கினர். பின்பு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று மதியம் அம்மனுக்கு மாவிளக்கு படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !