உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலுக்கான மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்!

துலுக்கான மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்!

திருபுவனை: பாளையம் துலுக்கான மாரியம்மன் கோவிலில், புதிய தேரோட்டம் நேற்று நடந்தது. மதகடிப்பட்டு பாளையம் துலுக்கான மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவம் மற்றும் தேர் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேர்த் திருவிழா நேற்று நடந்தது. அதனை முன்னிட்டு, காலை 7.00 மணிக்கு துலுக்கான மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 9.00 மணிக்கு புதிய தேரோட்டம் நடந்தது. இன்று 15ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !