உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலம்பூரில் மழை வேண்டி வேள்வி!

நீலம்பூரில் மழை வேண்டி வேள்வி!

சூலுார் : சூலுார் அடுத்த ஆச்சான் குளம் வேடச்சாமி திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி, மழை வேண்டி வேள்வி நேற்று நடந்தது. நீலம்பூர், முத்துக்கவுண்டன்புதுார், குளத்துார், அரசூர் உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் இணைந்து மழை வேண்டி வேள்வி நடத்தினர். காலை 8.00 மணிக்கு விநாயகர் வேள்வியும், 8.30 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வேள்வியும் நடந்தது. 10.00 மணிக்கு அம்மையப்பர் வேள்வியும், தொடர்ந்து பரந்தாமன் மற்றும் நவ நாயகர்கள் வேள்வி நடந்தது. வேள்வியை பேரூர் இளைய பட்டம் மருதாசல அடிகள் நடத்தி வைத்து, ஆசியுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !