வைஸ்ய குல பெண்கள் மழை வேண்டி பூஜை
ADDED :4163 days ago
தா.பேட்டை: தா.பேட்டை கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைஸ்ய குல பெண்கள் மழைவேண்டி விளக்குபூஜை நடத்தினர். தா.பேட்டை - நாமக்கல் ரோட்டில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மழைவேண்டி வழிபாடு நடந்தது. விழாவினை முன்னிட்டு, விநாயகர், முருகன், வள்ளிதெய்வானை, கன்னிகா பரமேஸ்வரி உள்ளிட்ட தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் தா.பேட்டை, தொட்டியம், முசிறி பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பெண்கள், 1008 அகல் விளக்குகள் ஏற்றி மழைவேண்டி வழிபட்டனர். விழாவினையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.