விநாயகர் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை!
ADDED :4163 days ago
தர்மபுரி: தர்மபுரி நெசவாளர் நகர் ஸ்ரீ விநாயகர் வேல்முருகன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை, 11 மணிக்கு, பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், காவடி ஆட்டமும், மதியம், 12.30 மணிக்கு, ஸ்வாமிக்கு பாலாபிஷேகமும், மதியம், ஒரு மணிக்கு அன்னதானமும் நடந்தது. இரவு, 9 மணிக்கு மேல், 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத வேல்முருகன் கல்யாண வைபவம் நடந்தது. இன்று, 15ம் தேதி காலை, 6 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை, செங்குந்தர் சிவநேய செல்வர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.