மாசான பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ADDED :4161 days ago
சத்தியமங்கலம் : ஈரோடு ஸ்ரீ மாசான பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையம் ஸ்ரீ மாசான பத்ரகாளியம்மன் மற்றும் தீர்த்தக்கரை மாரியம்மன் வகையறா கோவில்கள் விழா கடந்த 5ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து, கம்பத்துக்கு மஞ்சள் பூசி, மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர்.