மாங்கல்ய பாக்கியம் வேண்டி பெண்கள் விளக்கு பூஜை!
ADDED :4163 days ago
பொன்னேரி : மாங்கல்ய பாக்கியம், திருமண தடை நீங்க பெண்கள் தையல்நாயகி அம்மனுக்கு, விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். பொன்னேரி, சிங்கிலிமேடு கிராமம் வைத்தீஸ்வரர் கோவிலில், தையல் நாயகி அம்மன் சன்னிதி உள்ளது. நேற்று முன்தினம் மாலை, சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, தையல் நாயகி அம்மனுக்கு பெண்கள் சிறப்பு விளக்கு பூஜை நடத்தினர். பெண்கள் மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் வேண்டி விளக்குகளுக்கு மலர் தூவி பூஜை மேற்கொண்டனர். இதில், சிங்கிலிமேடு, தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 200 பேர் பங்கேற்றனர். முன்னதாக, அம்மனுக்கு பால், தேன், தயிர், பழம் ஆகியவற்றால், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.