உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேச சுவாமி கோவிலில் ஸ்ரீவாரி கல்யாண உற்சவம்!

வெங்கடேச சுவாமி கோவிலில் ஸ்ரீவாரி கல்யாண உற்சவம்!

உளுந்தை : உளுந்தை வெங்கடேச சுவாமி கோவிலில், கருட சேவையும், ஸ்ரீவாரி கல்யாண உற்சவமும் நடந்தது. கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு கிராமம் அடுத்துள்ளது உளுந்தை ஊராட்சி. இங்குள்ள வெங்கடேச சுவாமி கோவிலில், சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, கருட சேவையும், ஸ்ரீவாரி கல்யாண உற்சவமும் நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு நித்திய பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, காலை 5:30 மணிக்கு கருட சேவையும், காலை 9:00 மணிக்கு திருவேந்தி காப்பு, தீர்த்த பிரசாத விநியோகமும், காலை 9:30 மணிக்கு மகா சாந்தி ஹோமமும், நண்பகல் 11:00 மணிக்கு மகா சாந்தி திருமஞ்சனமும், பகல் 1:00 மணிக்கு விசேஷ ஆராதனையும் நடந்தது. அதன்பின், இரவு 7:10 மணிக்கு திருமலை - திருப்பதி அர்ச்சகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, வேதங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி வெங்கடேச பெருமாளுக்கு ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதன் பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாரி திருவீதி உலாவும் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !