உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழாயிரம்பண்ணை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்!

ஏழாயிரம்பண்ணை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்!

சாத்தூர் : ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோயிலில், பொங்கல்விழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் பொங்கல்விழா, கடந்த 4 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் அம்மன் , பல்வேறு வாகனங்களில் முக்கியவீதிகள் வழியாக வலம் வருதல் நடந்தது. கடந்த 11 ல் பொங்கல்விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். மறுநாள் காலையில் கயிறுகுத்துவிழா நடந்தது. ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுக்கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், விரதமிருந்து அக்னிசட்டி, ஆயிரங்கண்பானை எடுத்து வந்தனர். முத்து, முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்தி கடன்களை, கயிறு குத்துவிழாவின் போது காணிக்கையாக செலுத்தியும் வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. ஒம்சக்தி பராசக்தி என கோஷமிட்டவாறு பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக, அம்மன் தேரில் வலம் வந்தார். 12 நாட்கள் நடைபெற்ற விழாவின் இறுதி நாளான நேற்று, அம்மனுக்கு மஞ்சள்நீராட்டு நடந்தது. இதை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !