கருப்பண்ணசுவாமி கோயிலில் பூக்குழி விழா!
ADDED :4163 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பழைய போலீஸ் லைன் தெருவில் உள்ள, பதினெட்டாம்படி சந்தன மகா கருப்பண்ணசுவாமி கோயிலில், நேற்று முன்தினம் சுவாமிக்கு மலர் அலங்காரம், மகா அபிஷேகம் நடந்தது. அன்றிரவு மாலை அணிந்து விரதம் இருந்தவர்கள், கோயில் முன், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.