சங்கராபுரம் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :4210 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. சங்கராபுரம் கடைவீதி அரசமரத்தடி ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.