சங்கரமடத்தில் இன்று விஷ்ணு சகஸ்ரநாமம்
ADDED :4160 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்தில் மழை வேண்டி, இன்று விஷ்ண சகஸ்ர நாமம் நடக்கிறது. விழுப்புரம் சங்கரமடத்தில் காஞ்சி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சுவாமிகள் ஜெயந்தி விழாவையொட்டி, <உலக நன்மை மற்றும் மழை வேண்டி கடந்த 15ம் தேதி அதிருத்ர சதசண்டி ஹோமம் நடந்தது. தொடர்ந்து தினந்தோறும் கணபதி பூஜை மற்றும் ஹோமங்கள் நடந்து வருகிறது. இதையொட்டி இன்று காலை 7:00 மணிக்கு ருத்ர ஜெபம், சண்டி பாராயணம், மாலை 3:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடக்கிறது.