உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி சங்கரமடம் பட்டண பிரவேச ஊர்வலம்!

மழை வேண்டி சங்கரமடம் பட்டண பிரவேச ஊர்வலம்!

விழுப்புரம்: விழுப்புரம் சங்கரமடத்திலிருந்து முக்கிய மாடவீதிகள் வழியாக உலக நன்மை கருதி பட்டண பிரவேச ஊர்வலம் நடந்தது. விழுப்புரம் சங்கரமடத்தில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், உலக ஒற்றுமைக்காகவும் அதிருத்ர சதசண்டி ஹோமம் கடந்த 15ம் தேதி நடந்தது. இதில் தினந்தோறும், கணபதி பூஜை, ஹோமங்கள் நடந்ததோடு, சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பஜனை நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6:00 சங்கரமடத்தில் இருந்து பட்டண பிரவேசம் நடந்தது. இதையொட்டி, ரிஷப வாகனத்தில் பரமாச்சாரியர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் வெண்கல உருவச் சிலை, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்கள் தோள்களில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்னால் யானை அணிவகுத்து சென்றது. தொடர்ந்து 150 வேத பண்டிதர்கள் ருத்ரம், சமதம் உள்ளிட்ட வேத மந்திரங்களை முழங்கியபடி சென்றனர். விழுப்புரம் நகர முக்கிய மாட வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில், யானை மீது பரமாச்சாரியரின் பாதுகை கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !