உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலமங்கலம் கிராமத்தில் 108 கலசாபிஷேக விழா

நீலமங்கலம் கிராமத்தில் 108 கலசாபிஷேக விழா

கள்ளக்குறிச்சி: காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தியையொட்டி நீலமங்கலத்தில் 108 கலசாபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை வினாயகர், வள்ளி, தெய்வானை, முருகன், சிவன், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து பசுபூஜையும் நடந்தது.தொடர்ந்து விநாயகர் வழிபாடு, புண்ணியாவஜனம் பூஜைகளுக்குப்பின் 108 கலச ஆவாஹனம், ருத்ர பாராயணம், வேத பாராயணம், காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ் வரருக்கு 108 கலசாபிஷேகம், சர்வ அலங்காரம், அலங்கார தீபங்கள் வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. மாலையில் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் படத்திற்கு அலங்காரம் செய்து, கிராம பிரவேசம் பஜனை நிகழ்ச்சி நடந்தது. காஞ்சி சங்கரா கலை அறிவியல் கல்லூர் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !